முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுப்புறச்சூழலை பாதிக்காத பொருளாதார வளர்ச்சியே அவசியம்- மன்மோகன்சிங்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012      இந்தியா

புதுடெல்லி,பிப்.- 14 - பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டு மக்களுக்கு அவசியம்தான். ஆனால் சுற்றுப்புறச்சூழலை பாதிக்கின்ற வகையில் அந்த வளர்ச்சி ஏற்பட நாம் அனுமதிக்க முடியாது. அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டு மக்களுக்கு அவசியமானதாகும். மிக முக்கியமானதும் கூட. ஆனால் அது சுற்றுப்புறச்சூழலை பாதிக்கின்ற வகையில் ஏற்படக்கூடாது என்று கூறினார். இதர நாடுகளை சேர்ந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள் டர்பனில் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பருவகால மாற்றம் தொடர்பான மாநாட்டிற்கு பிறகு மீண்டும் சந்திதித்து ஆலோசனை நடத்த உள்ளார்கள். அப்போது உலகளாவிய பருவகால மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்