முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக் பாட்ஷா மர்ம மரணம் கொலையாகவும் இருக்க வாய்ப்புள்ளது - சுப்பிரமணியசாமி

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் - 21 - ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும், ரியல் எஸ்டேட்  அதிபருமான சாதிக் பாட்ஷாவின் மரணம் மர்மமாக உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. தாமதப்படுத்துவது ஏன்? என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்.  2ஜி அலைவரிசை ஊழல் தொடர்பாக தொலைதொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, தொலைதொடர்புதுறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியல்டீஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வியும், கங்குலியும் விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் நிரா ராடியா மற்றும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 29-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் நடவடிக்கை அறிக்கை  தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுகிறது. சிறப்பு நீதிபதியாக  ஓ.பி.சைனி நியமிக்கப்படுவார் என்று உறுதியாக தெரிகிறது. 31-ந் தேதியன்று ஆ.ராசா மீதும் மற்றும் சிலர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. 

இதற்கிடையே சில நாட்களுக்கு  முன் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவரது மர்ம மரணம் பலசந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட போதிலும் அதை நம்ப முடியவில்லை என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சாதிக் பாட்ஷா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ.யை விசாரிக்க கோரியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புலனாய்வை சி.பி.ஐ. இதுவரை எடுத்துக்கொள்ளவில்லை.

 ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி இவ்விவகாரம் தொடர்பாக ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சாதிக் பாட்ஷாவின் மர்ம மரணம் குறித்த புலனாய்வை நடத்துமாறு சி.பி.ஐ.யை கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த புலனாய்வை முறைப்படி சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் பணி நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

தாமதிக்கும் ஒவ்வொரு கனமும் அபாயகரமானது. தடயங்களை அழித்துவிட வாய்ப்புள்ளது. எனவே, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான  சாதிக் பாட்ஷாவின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. தாமதமின்றி விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சாதிக் பாட்ஷாவுக்கு மூச்சுத் திணறல்  ஏற்பட்டுள்ளது. பிராண வாயு போதுமான அளவு கிடைக்காததால் உயிர் பிரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் பிராண வாயு போதுமான அளவு கிடைக்காமல் போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். முகத்தில் குறிப்பாக மூக்குப் பகுதியில் தலையணையை வைத்து  அழுத்தமாக இறுக்கினாலும் பிராண வாயு  செல்வது தடைபடும். 

எனவே, சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆகவே சி.பி.ஐ. புலனாய்வு பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் தான் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும் . 

இவ்வாறு சுப்பிரமணியசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். சுப்பிரமணியசாமி மட்டுமல்ல, சிந்தனை, தெளிவுள்ள அனைவர் மனதிலும் இந்த சந்தேகங்கள் தான் தொக்கி நிற்கின்றது.

S

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago