முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர சட்டசபையில் கூச்சல் குழப்பம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,பிப்.- 15 - ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் நேற்று சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திர மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துள்ளது. சட்டசபை நேற்று கூடியதும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சம்தி கட்சி மற்றும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து தாங்கள் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த உறுப்பினர் டி.நாகேஸ்வர ராவ் மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி.மல்லேஷ்,தெலுங்கானா ராஷ்ட்ரீய சம்தி கட்சியின் சட்டசபை தலைவர் ஈதலா ராஜேந்தர் ஆகியோர் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் நாதெந்தலா மனோகர் அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தி சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோஷம் போட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபையை நடத்த முடியாததால் முதல் தடவையாக சபையை சபாநாயகர் மனோகர் ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை தொடங்கியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய இருக்கைகளுக்கு செல்லமறுத்து தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் இரண்டாவது முறையாக சபை ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக சபை கூடியபோதும் எதிர்க்கட்சிகளுடன் பாரதிய ஜனதாவும் சேர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் சபையை நடத்த முடியாமல் மனோகர் சபையை நேற்று முழுவதும் ஒத்திவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்