முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் கமிஷனிடம் வருத்தம் தெரிவித்தார் சல்மான் குர்ஷித்

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிப்.- 15 - இடஒதுக்கீடு தொடர்பாக தாம் கூறியதற்காக தேர்தல் கமிஷனிடம் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் வருத்தம் தெரிவித்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய சட்ட அமைச்சராக சல்மான் குர்ஷித் இருக்கிறார். உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இவரது மனைவி பாரூஹ்பாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த சல்மான் குர்ஷித், தேர்தல் விதிமுறைகளை மீறி இந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்தால் முஸ்லீம்களுக்கு அரசு வேலைவாய்ப்பிலும் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு செய்யப்படும் என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரியது. தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆலோசனை நடத்தினார். இதனால் சல்மான் குர்ஷித், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் தாம் பேசிய பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு சல்மான் கடிதம் கடிதம் எழுதியுள்ளார். இதனால் அவர் மீது எடுக்கப்படவிருந்த நடவடிக்கையை நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரூக்பாத் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கே.கே. குப்தா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்