முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஹோலி பண்டிகை ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,மார்ச்.- 21 - காஷ்மீர் மாநிலத்தில் ஹோலி பண்டிகையை பாதுகாப்பு படையினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.  நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் ஹோலி பண்டிகையை மக்கள் மிகவும் விமர்சையாக கொண்டாடுகிறார்கள். குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பமாவதை வரவேற்கும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினரும் கலந்துகொண்டனர். வஜீவ்பாஹ் முகாமில் ஹோலி பண்டிகையை கொண்டாட மத்திய படையினர் ஏற்பாடு செய்தனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். ஹொலி பண்டிகையை கொண்டாட ராணுவ வீரர்களும் மத்திய படையினரும் தங்களுடைய ஊர்களுக்கு விடுமுறையில் சென்றுள்ளனர். 

விடுமுறையில் செல்ல முடியாத நாங்கள் இங்கு கொண்டாடுகிறோம் என்று மத்திய படையின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகர் திரிபாதி பேட்டி அளிக்கையில் கூறினார். மேலும் பல ராணுவ முகாம்களிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்