முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இஸ்ரேல் நாட்டு தூதர் திடீர் சந்திப்பு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.- 16 - புதுடெல்லியில் இஸ்ரேல் நாட்டு தூதரக காரில் குண்டுவெடிக்க செய்தது தொடர்பாக அந்த நாட்டு தூதர் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தாக தெரிகிறது. டெல்லியில் நேற்றுமுன்தினம் ஒளரஙகசீப் சாலையில் பிரதமர் வீடு அருகே சென்று கொண்டியிருந்த இஸ்ரேல் நாட்டு தூதரக கார் மீது தீவிரவாதிகள் ஸ்டிக்கர் குண்டை வைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்தனர். இதில் காரில் சென்ற இஸ்ரேல் தூதரக பெண் அதிகாரி மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை ஈரான் நாட்டு ஆதரவு தீவிரவாதி ஒரு சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்து குண்டை வெடிக்கச்செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.இந்தநிலையில் நேற்று மாலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இஸ்ரேல் நாட்டு தூதர் ஆலோன் உஸ்பிஜ் சந்தித்து பேசினார். அப்போது குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்