முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 3-வது கட்ட தேர்தலில் 57 சதவீத வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ,பிப்.- 16 - உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கு நேற்று 3-வது கட்ட 56 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 57 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்றுடன் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நேற்றுநடைபெற்ற 3-வது கட்ட தேர்தலும் அமைதியாக நடைபெற்றது. நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ள 56 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளும் அடங்கும். இந்த இரண்டு தொகுதிகளும் நேரு குடும்ப செல்வாக்குள்ளவைகளாகும். 3-வது கட்டமாக 56 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 1.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 3 மாநில கேபினட் அமைச்சர்கள், ஒரு இணை அமைச்சர், 29 எம்.எல்.ஏ.க்கள், 14 முன்னாள் அமைச்சர்கள் உள்பட ஆயிரத்து 18 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இவர்களின் வெற்றி, தோல்வியை ஒரு கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் நிர்ணயித்துள்ளனர். ஓட்டுப்பதிவு நேற்றுக்காலை 7 மணிக்கு தொடங்கியது. முதலில் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்தது. பின்னர் விறுவிறுப்படைந்தது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. 57 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அடுத்து முறையே வரும் 19,23, 28 ஆகிய தேதிகளிலும் மார்ச் மாதம் 3-ம் தேதியும் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் மாதம் 6-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்