முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவில் புதிய கூட்டணி அமைக்க ஒரிசா முதல்வர் முயற்சி

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்,பிப்.- 16 - தேசிய அளவில் புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முயற்சியில் இறங்கியுள்ளார்.  தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் இருந்து வருகிறது. இந்த இரண்டு கூட்டணிகள் மீதும் நவீன் பட்நாயக் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல் நிறைந்ததாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி வகுப்புவாத அமைப்பாக இருக்கிறது என்று நவீன் பட்நாயக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதனால் மத்தியில் புதிய கூட்டணி அமைக்க வேண்டும். இந்த கூட்டணியின் நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஊழலற்ற கூட்டணியாகவும் மதசார்பற்ற கூட்டணியாகவும் இருக்க வேண்டும் என்று பட்நாயக் கூறினார். முதல்வர் பட்நாயக் நேற்று புவனேஸ்வரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் அல்லாத முதல்வர்களை ஒன்று சேர்ப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு நவீன் பட்நாயக் மேற்கண்டவாறு பதில் அளித்தார். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு மத்திய அரசு அதிகாரம் அளிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி தத்துவ உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு இந்த செயலலில் ஈடுபட்டு வருகிறது என்றும் நவீன் பட்நாயக், மத்திய அரசு மீது கடுமையாக குற்றஞ்சாட்டினார். தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு அதிகாரம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை எதிர்க்குமாறு மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்களுக்கு பட்நாயக் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்