முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட மீனவர்கள் இருவர் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

நாகர்கோவில், பிப்.17 - குமரி மாவட்ட மீனவர்கள் இருவர் நடுக்கடலில் கடல்கொள்ளையர்கள் என எண்ணப்பட்டு இத்தாலி மாலுமிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். குமரி மாவட்ட மேற்கு கடற்கரை கிராமங்களான ராமன்துறை, இரயுன்மன்துறை, புத்ைதுறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கேரள கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இதே போல் புத்ைதுறையைச் சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த அஜீஸ் டிங்கு(20), கிலாரி, ஜான்சன், முத்தப்பன், அலெக்சாண்டர், பிரான்சிஸ், பிங்செரியன், மார்ட்டின், ஆன்டனி, குளச்சலைச் சேர்ந்த ஜெலஸ்டின் ஆகியோரும் சேரளாவைச் சேர்ந்த சில மீனவர்களும் இணைந்து கொல்லம் கடலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலை வீசி மீன்களைப்பிடிக்க காத்திருந்த போது அந்த வழியாக ஆயில் டேங்கர் ஏற்றிய சரக்கு கப்பல் வந்தது. திடீரென கப்பலில் இருந்தவர்கள் விசைப்படகின் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் படகின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த அஜீஸ்டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் படகு தளத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

அஜீஸ்டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் அலறலைக் கேட்ட படகின் கீழ்தளத்தில் இருந்தவர்கள் மேல்தளத்திற்கு ஓடி வந்தனர். அதற்குள் மீனவர்களைச் சுட்ட கப்பல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. இது பற்றி படகில்; இருந்தவர்கள் புத்ைதுறையில் உள்ள உறவினர்களுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் கொல்லம்; மீன்பிடித்துறைமுக அதிகாரிகளுக்கு கூறப்பட்டது.

உடனே அதிகாரிகள் கடலோர காவல்படையினரின் உதவியுடன் தப்பிச் சென்ற கப்பலை விரட்டிச் சென்று பிடித்தனர். நடுக்கடலில் பிடிபட்ட அந்த கப்பல் பின்னர் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்;டது. அங்கு கப்பலின் மாலுமிகளிடம் துறைமுக அதிகாரிகள் விசாரித்தனர்.

இத்தாலி கப்பல்; மாலுமிகள் கூறும்போது, விசைப்படகில் இருந்தவர்கள் கடல் கொள்ளையர்கள் எனக் கருதி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தனர். இருந்தாலும் மாலுமி கூறிய காரணத்தில் உண்மை இருக்கிறதா? ஏன்பதைக் கண்டறிய அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே குண்டடிப்பட்டு இறந்து போன குமரி மீனவர்கள் அஜீஸ்டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் உறவினர்கள் தகவலிறிந்து கதறினர். இருவரின் உடலும் கொச்சியிலிருந்து புத்ைதுறை கிராமத்திற்கு கொண்டு வரப்படும்.

அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள புத்ைதுறை, இரயுமன் துறை மற்றும் குளச்சல் பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள குடும்பத்துடன் புத்ைதுறை ஆலயம் முன்பு கூடினர். இதனால் மீனவ கிராமங்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளன. பெரும்பாலான மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்;லவில்லை. வீடுகள் முன்பு கறுப்புக்கொடி கட்டினர்.

இதற்கிடையே இறந்து போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுத் தரும் முயற்சியிலும் மீனவர் சங்க பிரதிநிதிகளும், வள்ளவிளை ஆலய பங்குதந்தை பிரடியும் ்ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்