நகைகளை கணக்கிட நாட்கள் பிடிக்கும்: கேரள அரசு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,பிப்.17 - திருவனந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயிலின் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை மதிப்பிட செய்ய அதிக நாட்கள் பிடிக்கும் என்று சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வைஷ்ணவ கோயில்களில் ஒன்றான பத்மநாபா சுவாமி கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் ரகசிய அறைகளில் ஏராளமான தங்கநகைகள், முத்துக்கள், பவளங்கள், வைடூரியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. ரகசிய அறைகளில் -வது அறை மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த அறை திறக்கப்படுவதை கோயில் அறக்கட்டளை எதிர்த்து வருகிறது. ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மதிப்பிடுவதற்காக தேசிய அருங்காட்சிய தொல்பொருள் பாதுகாப்பு துறை தலைவர் வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம்கோர்ட்டு நியமித்துள்ளது. இந்த குழுவானது வருகின்ற 20-ம் தேதி முதல் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியை ஆரம்பிக்கிறது. இதற்கிடையில் நகைகளை மதிப்பிடுவது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளில் ஒவ்வொன்றையும் மதிப்பிட குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும். அதனால் அனைத்து நகைகளையும் மதிப்பீடு செய்ய அதிக நாட்கள் பிடிக்கும் என்று அந்த அறிக்கையில் கேரள அரசு கூறியுள்ளது. நகைகளை மதிப்பீடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகள் தயாராகிவிட்டது.பொக்கிஷங்களில் உள்ள நகைகள் பழங்காலத்தைவைகளாக இருப்பதால் மதிப்பீடு செய்ய அதிக காலமாகும் என்றும் அந்த இடைக்கால அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: