முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரம்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 21 - தி.மு.க. தலைவர் கருணாநிதி, தஞ்சை, திருச்சி, திருவாரூரில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். 24 ம் தேதி மனுத்தாக்கல் செய்கிறார்.  தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அவர் 3 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார். அதன்படி 23 ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரச்சார தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் அவர் 24 ம் தேதி மனுத்தாக்கல் செய்கிறார். 

பின்னர் தஞ்சை செல்லும் அவர், அங்கு தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். மறுநாள் 25 ம் தேதி மாலையில் திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த தகவல்களை தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago