சூதாட்ட தரகருடன் ஐ.சி.சி ஊழல் தடுப்பு அதிகாரிக்கு தொட்ரபு!

புதன்கிழமை, 21 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே 22 - ஐசிசி தனது ஊழல் ஒழிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், இந்த ஊழல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை அதிகாரி ஒருவருக்கு சூதாட்டத் தரகருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

கடந்த மார்ச் - ஏப்ரலில் டாக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது இந்த ஐசிசி அதிகாரி இந்திய சூதாட்டத் தரகருடன் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஏஜென்சி செய்திகள் கூறியுள்ளன. டாக்காவில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்று முதன்மை ஐசிசி அதிகாரி தரம்வீர் சிங் யாதவ் மற்றும் இந்திய சூதாட்டத் தரகர் என்று கருதப்படும் அடானு தத்தா ஆகியோரிடையே நடந்ததாகக் கருதப்படும் ஆடியோ உரையாடலை வரிக்கு வரி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூதாட்டத் தரகர் டாக்காவில் அப்போது கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் இந்த ஐசிசி அதிகாரி அவரை தனது இன்பார்மர் என்று கூறி உடனடியாக விடுவிக்குமாறு கூறியதாகவும் அதே சானல் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி ஏஜென்சி ஐசிசி அதிகாரி யாதவை தொடர்பு கொண்டபோது தான் எதுவும் கூறுவதற்கில்லை என்றும் ஐசிசி-யிடம் இது குறித்து கேட்டுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: