கொல்கத்தாவிடம் தோல்வி: டோனி கருத்து

புதன்கிழமை, 21 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, மே 22 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று முன் தினம் மோதிய லீக் போட்டியில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது சென்னை.

முதலில் விளையாடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் உழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் அதிகபட்சமாக ரெய்னா 65 ரன்னும், மெக்கல்லம் 28 ரன்னும் எடுத்தனர்.பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 2 ஓவ்ர்கள் எஞ்சி இருந்த நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இப்போது கடைசி சில ஆட்டங்களில் கலக்கிவரும் உத்தப்பா இந்த ஆட்டத்திலும் அசத்தினார். அவர் இந்த ஆட்டத்தில் 39 பன்தில் 67 ரன்கள் எடுத்தார். 

12 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது: டாஸ் தோற்றது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனென்ரால் தொடக்கத்தில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இதை பயன்படுத்தி கொல்கத்தா அமி வீரர்கள் நேர்த்தியுடன் பந்து வீசினார்கள். 

ரெய்னா வின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. நாங்கள் 10, 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இதனால் கொல்கத்தா அணிக்கு சவால் கொடுக்க முடியாமல் போனது. இவ்வாறு டோனி குறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: