பிசிசிஐ தலைவராக நீடிக்க கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 22 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,மே.23 - ஐ.பி.எல். நீங்கலாக பிசிசிஐ-யின் மற்ற நடவடிக்கைகளை நிர்வகிக்க அனுமதி கோரிய என்.சீனிவாசன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் தமது பதவியில், நடந்து முடிந்த 6-வது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கின் காரணமாக பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து வழக்கு முடியும் வரை சீனிவாசன் பதவியைத் திரும்பப் பெற முடியாது என்றும் உச்ச நீதிமனறம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சீனிவாசன் ஐ.பி.எல் தொடர்பில்லாத பிசிசிஐ தொடர்பான நடவடிக்கைகளில் தலைவர் பதவியைத் தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இரண்டு முறை தள்ளுபடியானது.

இந்நிலையில் மீண்டும் தாம் பதவியைத் தொடர வேண்டும் என்று சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரனைக்கு வந்தது. மனுவை விசாரித்த விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: