டெல்லி அணியை வீழ்த்திய மும்பைக்கு 6-வது வெற்றி

வெள்ளிக்கிழமை, 23 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே 24 - மும்பையில் நடைபெற்ற 51-வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் 19 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு தோல்வியை கண்டுள்ளதுடெல்லி.முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 140/2 என்ற நிலையிலிருந்து 33 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை மடமடவென இழக்க 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் 158/4 என்று முடிந்து போனது.

 

டாஸ் வென்ற டெல்லி, மும்பையை பேட் செய்ய அழைத்தது. சிம்மன்ஸ், மைக் ஹஸ்சி அதிரடியில் 8 ஓவர்களில் 87 ரன்கள் விளாசப்பட்டது.  சிம்மன்ஸ் 35 ரன்களிலும், ஹஸ்ஸி 56 ரன்களிலும் வெளியேறினர். ரோகித் சர்மா 30 ரன்னில் அவுட் ஆன பிறகு மும்பை விக்கெட்டுகள் சரிந்து 33 ரன்களுக்கு மீதமுள்ள விக்கெட்டுகள் அனைத்தையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னதாக டெல்லி அணியில் பீட்டர்சன் அதிரடியாகத் துவங்க 6வது ஓவரில் ஸ்கோர் 43 ரன்களை எட்டப்பட்டது. விஜய் 8 ரன்னில் கோபால் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். பிறகு 9வது ஓவரை ஹர்பஜன் வீச பீட்டர்சன் பேட்டை இடது கைக்கு மாற்றிக்கொண்டு விளாச நினைத்து பவுல்டு ஆனார். பீட்டர்சன் 31 பந்துகளில் 44 ரன்களுக்கு வெளியேறினார்.

10வது ஓவரில் தினேஷ் கார்த்திக் படுமோசமான, பொறுப்பற்ற ஷாட்டைத் தேர்வு செய்து ஆட்டமிழந்தார். .61/3 என்ற நிலையிலிருந்து திவாரி, டுமினி இணைந்து 9ஓவர்களில் 85 ரன்களைச் சேர்த்தாலும் 19வது ஓவரில் 146 ரன்கள் இருந்தபோது திவாரி அவுட் ஆனது டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில் கேதர் ஜாதவும், டுமினியும் ஆடினர் பும்ரா வீசிய அந்த ஓவரில் 9 ரன்களையே அடிக்க முடிந்தது.

டெல்லி துரத்தும்போது 16வது ஓவரில் ஸ்கோர் 116/3 என்று இருந்தது. டுமினி 24 ரன்களுடனும், மனோஜ் திவாரி 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 12 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஓரளவுக்கு வாய்ப்பும் இருந்தது.

ஆனால் 19வது ஓவரி வீசிய தென் ஆப்பிரிக்க பவுலர் மெர்ச்சண்ட் டி லாங்கே 3வது பந்தில் திவாரியை வீழ்த்தினார். திவாரி 31 பந்துகளில் 41 ரன்களுக்கு அவுட். அந்த ஓவரில் 7 ரன்களே வர கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பும்ரா வீசிய ஓவரில் 9 ரன்களே எடுக்க முடிந்தது. .

 

மைக் ஹஸ்சி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். டெல்லி அணி இந்தத் தொடரில் 2 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: