ராஜஸ்தான் வென்று பஞ்சாப் நம்பர்-1 இடத்தை தக்க வைத்தது

சனிக்கிழமை, 24 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

மொஹாலி, மே 24 - மொஹாலியில்  நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது பஞ்சாப். பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என்று அணைத்திலும் வலுவான நிலையை காண்பித்தது பஞ்சாப். இதனால் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 என்ற கடின இழக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது. வெற்றி பெறும் ஆர்வத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பால்க்னர் சிக்சர்களை விளாசியதால் ஆட்டத்தில் சூடு பிடித்தது. அந்த கடைசி ஓவரில் பால்க்னர் அதிரடியாக 4 சிக்சர்களை விளாசியது மிகவும் அதிர்ச்சி அளிக்கும்படி இருந்தது. ஆனாலும் வெற்றிக்கு தேவையான ரன்களை அந்த அணியால் சேர்க்க முடியவில்லை.

இந்த ஐ.பி.எல். சிசனில் ஆரம்பத்திலிருந்தே வலுவாக காணப்படும் பஞ்சாப் அணிக்கு இது 10-வது வெற்றியாகும் இதனால் இந்த அணி 20 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சென்னை 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகல் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: