ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் சாம்பியன்

திங்கட்கிழமை, 26 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

லிஸ்பன், மே 27 - ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக்கில் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது ரியல் மாட்ரிட். 

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் அபாரமாக ஆட, 36-வது நிமிடத்தில் அட்லெடிகோ அணியின் டீகோ காடின்ஸ் தலையால் முட்டி அற்புதமாக கோலடித்தார். இதன்பிறகு முதல் பாதி ஆட்டம் மட்டுமின்றி, ‘இஞ்சுரி’ நேரத்திற்கு முன்பு வரை கோல் எதுவும் விழாததால் அட்லெடிகோ அணியே முன்னிலையில் இருந்தது. ‘இஞ்சுரி’ நேரத்தின் 3-வது நிமிடத்தில் (90+3) ரியல் மாட்ரிட் அணியின் செர்ஜிகோ ரேமாஸ் கோலடிக்க, ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 

இதில் ரியல் மாட்ரிட் அபாரமாக ஆடியது. 110-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் கேரத் பேலும், 118-வது நிமிடத்தில் மாட்ரிட்டின் மார்செலோவும், 120-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரெனால்டோவும் கோலடிக்க, ரியல் மாட்ரிட் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதனால் சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக பட்டம் வெல்லும் அட்லெடிகோவின் கனவு தகர்ந்தது. 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்: