கேரள கால்பந்தாட்ட அணிக்கு பெயர் சூட்டிய சச்சின்!

செவ்வாய்க்கிழமை, 27 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

திருவனந்தபுரம், மே.28 - கேரள கால்பந்தாட்ட அணிக்கு கேரள பிளாஸ்டர்ஸ் என்று கிரிக்கெட் வீரரும் அந்த அணியின் சக உரிமையாளருமான சச்சின் டெண்டுல்கர் பெயர் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப்போல, கால்பந்தாட்ட போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) என்று இந்த போட்டிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் கேரள கால் பந்தாட்ட அணியின் உரிமையாளர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர். கால்பந்தாட்ட அணிக்கு பெயர் சூட்டுவது குறித்து முடிவெடுக்க இன்று அவர் திருவனந்தபுரம் வந்தார். அங்கு முதல்வர் உம்மன் சாண்டியுடன் சச்சின் ஆலோசனை நடத்தினார். இதில் கேரள கால்பந்தாட்ட அணிக்கு 'கேரளா பிளாஸ்டர்ஸ்' என்று பெயரிட முடிவு செய்யப்பட்டது. இதனை பிறகு செய்தியாளர்களிடம் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

இதனிடையே நிருபர்களிடம் சச்சின் கூறுகையில், என்னை ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் நாட்டு மக்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு ஹாக்கி, கால்பந்தாட்டம், டென்னிஸ் ஆகியவற்றில் அளவற்ற பிரியம் உண்டு. என்னை மாஸ்டர் பிளாஸ்டர் என்று ரசிகர்கள், விளையாட்டு விமர்சகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இப்போது கேரள கால்பந்தாட்ட அணிக்கும் இந்த பெயர் பொருந்திப்போகிறது என்றார்.

முன்னதாக எதிர்க்ட்சி தலைவர் அச்சுதானந்தனையும் சச்சின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அடுத்தாண்டு கேரளாவில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிகளுக்கான தூதராக இருப்பதாக சச்சின் ஒப்புக்கொண்டதாக கேரள அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: