பிளே ஆஃப் முதல் போட்டி மழையால் தள்ளிவைப்பு

செவ்வாய்க்கிழமை, 27 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா,மே.28 - கொல்கத்தாவில் கனமழை பெய்ததன் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நாளை (இன்று) 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மைதான நிலவரம் முழுப் போட்டியை நடத்த தோதாக இல்லையெனில் 5 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்படும். மைதானம் அதற்கும் தயாராக இல்லையெனில் வெறும் சூப்பர் ஓவர் வெற்றியைத் தீர்மானிக்கும். சூப்பர் ஓவர் மட்டுமே என்று முடிவெடுக்கப்பட்டால் ஆட்டம் இரவு 9.10 மணிக்குத் துவங்கும். இதுவும் முடியவில்லையெனில் லீக் சுற்று ஆட்டங்களில் அதிக வெற்றியைப் பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதாவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்: