Idhayam Matrimony

பிரஞ்சு ஓபன்: முர்ரே - பெரர் 2வது சுற்றுக்கு தகுதி

புதன்கிழமை, 28 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

பாரீஸ், மே 29 - கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 

உலகின் 7ம் நிலை வீரரான ஆண்டி முர்ரே(இங்கிலாந்து) தொடக்க சுற்றில் கஜகஸ்தான் வீரர் ஆந்த்ரே கொலுபேவை எதிர்கொண்டார். இதில் முர்ரே 6_1,6_4,3_6,6_3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றில் அவர் ஆஸ்திரேலிய வீரர் மரின்கோவை சந்தித்தார். 5ம்நிலை வீரரான டேவிட் பெரர்(ஸ்பெயின்) 6_1, 6_3 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்து வீரர் இகோரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

உலகின் 16ம் நிலை வீரரான டோமி ஹாஸ்(ஜெர்மனி) தொடக்க சுற்றில் எஸ்டோனியா வீரர் ஜூயர் சென்னை எதிர்கொண்டார். இதில் ஹாஸ் 2_5 என்ற கணக்கில் பின் தங்கியிருந்த போது காயம் காரணமாக விலகினார். இதனால் ஜூயர் சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பெண்கள் பிரிவில் 11ம் நிலை வீராங்கனையான அனாஇவானோவிக் (செர்பியா) 10ம் நிலை வீராங்கனை சாரா இரானி(இத்தாலி) ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்