வங்கதேசத்துக்கு எதிரான போட்டி: சுரேஷ் ரெய்னா கேப்டன்

புதன்கிழமை, 28 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே, 29 - வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

முக்கிய வீரர்களான தோனி, கோலி, தவான், ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, மொகமட் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

மகாராஷ்ட்ராவின் கேதர் ஜாதவ் இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் சமீபமாக 1223 ரன்கள் எடுத்ததால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக வீசியுள்ளது அவருக்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

 

ஆனால் ராபின் உத்தப்பா மீண்டும் அணியில் வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஐபிஎல். கிரிக்கெட்டில் அவர் அதிகபட்ச ரன்களை எடுத்துள்ளார். மார்ச் 2012 தான் அவர் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடியது. என்பது குறிப்பிடத்தக்கது.

 

மீண்டும் தினேஷ் கார்த்திக் பற்றிய கேள்வி வரும். ஆனால் ரித்திமான் சஹா ஐபிஎல் கிரிக்கெட்டில் எடுத்த ரன்கள் அவரது தேர்வைத் தீர்மானித்துள்ளது.

 

ஆனால் வினய் குமார் மற்றும் மோகித் சர்மா மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. மோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கலாம். ஆனால் அவரது சர்வதேச பவுலிங் தரம் சந்தேகத்திற்குரியதே. அதேபோல் வினய் குமாரும் சர்வதேச பவுலிங் தரநிலைகளை நிரூபித்தவர் அல்ல.

 

இந்திய அணி வருமாறு:

 

சுரேஷ் ரெய்னா (கேப்டன்) 

ராபின் உத்தப்பா 

அஜின்கியா ரஹானே 

புஜாரா 

அம்பாட்டி ராயுடு 

மனோஜ் திவாரி 

கேதர் ஜாதவ் 

ரித்திமான் சஹா (வி.கீ.) 

பர்வேஸ் ரசூல் 

அக்‌ஷர் படேல் 

வினய் குமார் 

உமேஷ் யாதவ் 

ஸ்டூவர்ட் பின்னி 

மோகித் சர்மா 

அமித் மிஸ்ரா.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: