முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் கிராமங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு

வியாழக்கிழமை, 29 மே 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, மே 30 - உத்தரபிரதேசத்தில் கடுமையான மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 16 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. உத்தரபிரதேசத்தில் தான் மின்சார கட்டுப்பாடு மேலும் அதிகரித்து நிலைமை மோசமாக உள்ளது. கடந்த 16ம் தேதி முதல் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மின்சாரம் தற்போது 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கிராம பகுதிகளில் 18 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

நகர் பகுதிகளில் 22 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மின்சாரம் 19 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர் பகுதிகளில் 5 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைந்ததாலும், தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகரித்து இருப்பதாலும் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உ.பி. மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மின்சார விநியோகத்தை மாநில அரசு சரியான முறையில் கையாளாத காரணத்தால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசின் நிர்வாக சீர்கேடே காரணம் என்று மாநில பா.ஜனதா செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் குற்றம் சாட்டி உள்ளார். தலைநகர் பாட்னாவிலும் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 

நொய்டா, காசியாபாத், பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசியிலும் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை மக்கள் தோற்கடித்ததால் வாக்காளர்களை அரசு பழிவாங்குவதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. மக்கள் நலனில் அக்கறையுடன் தொடர்ந்து செயல்படுகிறோம் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்