முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி வீரரின் டுத் பிரஷ் ரூ.7 லட்சத்துக்கு ஏலம்!

சனிக்கிழமை, 31 மே 2014      உலகம்
Image Unavailable

 

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன்.1 - அமெரிக்காவின் அப்போலோ விண்வெளி ஆய்வு திட்டத்தின் கீழ் நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட விண்வெளி வீரரின் டுத் பிரஷ் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.

அமெரிக்காவில் நிலவுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள அப்போலோ விணகலத் திட்டத்தை நாசா உருவாக்கியது. கடந்த 1970-ஆம் ஆண்டு அப்போலோ-13 என்ற விண்கலத்தின் கட்டுபாட்டு விமானியாக ஜாக்ஸ்விஜெர்ட் என்ற அமெரிக்க விண்வெளி வீரர் பணியாற்றினார். பின்னர் 1982-ஆம் ஆண்டு எலும்பு புற்று நோயால் ஸ்விஜெர்ட் பாதிக்கப்பட்டு 51-வது வயதில் காலமானார். இவரது விண்வெளி பயணம் 1995-இல் அப்போலோ-13 என்ற ஹாலிவுட் திரைப்படமாக வெளிவந்தது. இவறது கதாபாத்திரத்தில் நடகர் கெவின் பாகோன் நடித்திருந்தார். 

விண்கலத்தில் நிலவுக்குச் சென்று ஆய்வு செய்த போது ஜாக் ஸ்விஜெர்ட் பயன்படுத்திய பொருட்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டிசான்டர்ஸ் ஏல நிலையத்தில் ஏலம் விடப்பட்டது. அவற்றில் அவர் பயன்படுத்திய டுத் பிரஷ் ஒன்று ரூ.7 லட்சத்துக்கும், பென்சில் ரூ.6 லட்சத்துக்கும் ஏலம் போனது. அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போனது என்று டிசான்டர்ஸ் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இவற்றை வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டது.

கடந்த வாரம் மாசாசூ செட்சில் நடைபெற்ற ஏலத்தில், நிலவுக்கு சென்ற அப்போலோ-15 என்ற விண்கலத்தில் பயன்படுத்திய கட்டுபாட்டு கருவி ரூ.3 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்