முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா - கனிமொழி ஜாமீன் மனுக்கள் மீது ஜூன் 3-ல் விசாரணை

சனிக்கிழமை, 31 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 1 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான வாதத்தை ஜூன் 3 -ம் தேதி  தொடங்கலாம் என்று டெல்லி  சிபிஐ நீதிமன்றம் அநுமதி அளித்து உத்தரவிட்டது.      

இது தொடர்பான வழக்கு  சிறப்பு நீதிபதி சைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப் பட்டுள்ள தயாளு அம்மாள்,நீங்கலாக ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. முன்னாள்  இயக்குனர் சரத்குமார், அமிர்தம், வினோத் கோயங்கா  உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 28 பேரும்நேரில் ஆஜரானார்கள். 

அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த வழக்கின் குற்றப் பத்திரிகை ஆவணங்கள் சுமார் 4 ஆயிரம் பக்கங்கள்  அளவுக்கு இருப்பதால் அவற்றைப் படித்துப் பார்க்க கூடுதல் அவகாசம் தேவை என்று நீதிபதியிடம் முறையிட்டனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்   சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  ஜாமீன் மனுக்களுக்கு அமலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராசா, கனிமொழி  உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள்  சாட்சியங்களைக் கலைத்து விடுவார்கள். எனவே அவர்களுக்கு ஜாமீன்  அளிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமலாக்கத் துறையின் மனுவை பரிசீலித்த நீதிபதி  சானி, ஜாமீன் மனுக்கள் மீதான வாதம் வரும் 3-ம் தேதி தொடங்கும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

இதனிடையே  கருணாநிதியின்  பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப் படுவதால்  அன்றைய தினம் தங்களால் விசாரணைக்கு னேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கும்படி ராசா, கனிமொழி, அமிர்தம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜூன் 4-ம்தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவி்ட்டார்.

2ஜி அலைக்கற்றை  ஒதுக்கீடு முறைகேடு  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளரான ஷாகித் உஸ்மான் பால்வா, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக ஒறு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி சைனி  உத்தரவிட்டார்.

                            

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!