முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணல்குவாரி உரிமம் பெற்று தருவதாக மோசடி: இருவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 2 - அசோக்நகர், 53_வது தெருவில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் ராஜப்பா. இவரிடம் எழும்பூரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் தியாகராய நகரை சேர்ந்த கணேசன், அவரது மகன் அருண்பிரசன்னா ஆகியோர் தொடர்பு கொண்டு, ''தங்களுக்கு பொதுப்பணித்துறையில் பெரிய அதிகாரிகளை தெரியும். 

அவர்கள் மூலம் மணல் குவாரி குத்தகை உரிமம் பெறலாம். இதற்கு ரூ.235 கோடியை அரசுக்கு 4 தவணைகளில் செலுத்த வேண்டும் என்றனர்.மேலும் குத்தகை உரிமத்தை உறுதி செய்த ரூ.10 கோடியை முன் வைப்பு தொகையாக கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.இதனை நம்பிய ராஜப்பா பல தவணைகளில் ரூ.10 கோடியை கணேசன், அவரது மகன் அருண் பிரசன்னாவிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறியபடி மணல் குவாரி குத்தகை உரிமத்தை பெற்று கொடுக்கவில்லை.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜப்பா பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து ராஜப்பா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பைனான்ஸ் அதிபர் கணேசனும், அவரது மகன் அருண்பிரசன்னா ஆகியோர் மணல் குவாரி குத்தகை உரிமம் பெற்று தருவதாக ராஜப்பாவிடம் ரூ.10 கோடி மோசடி செய்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து மோசடியில் <ஈடுபட்ட கணேசன், அருண் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்