முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை உயர்வுக்கு அகிலேஷ் யாதவ் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

சந்தோலி,  ஜூன் 3 - டீசல் விலை  உயர்த்தப்பட்டதற்கு உ.பி, மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவி்த்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் இன்னும் பல பிரச் சனைகளை எதிர்காலத்தில்  சந்திப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். டீசல் விலை  லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சந்தாலியில் சுதந்திர போராட்ட வீரர்  கஞ்சி பிரசாத்தின் சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது: 

தற்போது மத்திய அமைச்சர்களிடையே  டுவி்ட்டர்  இணையதளத்தில் கருத்துகளை பதிவு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு அவர்கள டுவிட்டரில் பதிலளித்து வருகிறார்கள்.  இங்குள் யாருக்காவது டுவி்ட்டர்  என்றால்  என்ன அர்த்தம் என்று தெரியுமா?. 

உத்தரபிரதேச மாநிலத்துக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மின்சாரத்தையும், நிலக்கரியையம் மோசி தலைமையிலான அரசு கொடுத்தால் 2016-ல் வட்டியும், முதலுமாக சேர்த்து திருப்பி  கொடுத்து விடுவோம். மேலும் தேவைப்பட்டாலும் நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

டீசல் விலையை உயர்த்தியதற்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங்  பாஜ்வா  கண்டனம் தெரிவி்த்துள்ளார்.  இதற்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சியின்போதுஇதுபோன்ற விலை உயர்வுக்கு  பஞ்சாப் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல் எதிர்ப்பு தெரிவி்த்து வந்தார். இப்போதும்  அவர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அவரது இரட்டை வேசம் அம்பலமாகி விடும் என்றார்.

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்