முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் சோலார் விமானம் வெள்ளோட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன்.4 - சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் விமானம் அடுத்த ஆண்டு இலகத்தை சுற்றி வர முயற்சி மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதற்கான வெள்ளோட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.

ஸ்விட்சர்லாந்தின் பேயர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சோலார் இம்பல்ஸ் 2 என்ற என்ற விமானம் 2 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு வானத்தில் பறந்த பின்னர் விமான நிலையத்துக்கு திரும்பி வந்தது. மார்க்ஸ் ஷெர்டெல் என்ற விமானி இந்த வெள்ளோட்டத்தை நடத்தினார். ஒருவர் மட்டும் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோலார் விமானங்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் முதல் முறையாக உலகத்தை சுற்றி வரும் முயற்சியாக 2015-ஆம் ஆண்டு பயணத்தை தொடங்க உள்ளனர். 

இந்த விமானத்துக்கு எரிபோருள் தேவையில்லை. காற்ற மாகபடுத்தும் வாயுவை வெளியிடாது. இரவிலும், பகலிலும் பறக்கும் திறனுடையது. இது குறித்து சோலார் இம்பல்ஸ் இணை நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான பைலட் போர்ஷ்பெர்க் கூறுகையில், உலகை வளம் வரக்கூடிய இந்த அறிமுக விமனங்கல் மு்ககிய கட்டத்தை அடைந்துள்ளனர். இந்தக் குழுவுக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் எங்களூடைய அனைத்து பங்குதாரர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான ஆரம்பாகும். எஸ்.ஐ.2 விமானம் முற்றிலும் நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டதாகும். வெகு தூரம் பறக்கக் கூடிய திறன்மிக்கதோடு நம்பகத்தன்மை கொண்டதுமாகும் என்றார்.

கார்பன் இழையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் விமானத்தின் இறகுகளின் நீலம் 72 மீட்டராகும். இது போயிங் 472-8ஐ ரக விமானத்தைக் காட்டிலும் பெரியது. மேலும் ஒரு காருக்கு சமமான 2,300 கிலோ எடையுடையதாகும். இந்த விமானத்தில் 17,000சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள 633 கிலோ எத்தியம் ரீசார்ஜ் பேட்டரிகள் இரவில் விமானம் பறக்க உதவும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்