முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானிம் வழங்கப்படாத சமையல் கியாஸ் விலை குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன்.4 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வலுப் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால் இந்தியாவில் இறக்குமதிக்கான செலவு கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இறக்கு மதி செய்யப்படும் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோலியம் பொருட்கள்  விலை குறைகிறது. சமையல் கியாஸ் விலையும் குறைந்துள்ளது. மானியம் இல்லாமல் வழங்கப்படும் சமையல் கியாஸ்  விலை சிலிண்டருக்கு ரூ.23 குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு பொது மக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுத்து வருகிறது. 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள் மானியம் அல்லாத விலையில் தான் சமையல் கியாஸ் சிலிண்டர் பெற முடியும்.

தற்போது மானியம் அல்லாத சிலிண்டர் ரூ.950 மூதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெரும்பாலான குடும்பங்கள் மானிய விலைக்கு பெறும் 12 சிலிண்டரிலேயே தேவையை சமாளித்து கொள்கின்றனர். இதனால் சமையல் கியாஸ் விலை குறைப்பு பெரும்பாலான குடும்பங்களுக்கு பயன்படாது என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்