முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மந்திரி சபை விரிவாக்கம்: 20 பேர் வரை இடம் பெற வாய்ப்பு

புதன்கிழமை, 4 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன்.5 - நரேந்திர மோடி பிரதமராக கடந்த 26-ஆம் தேதி பதவி ஏற்றார். புதிய மந்திரி சபையில் 24 பேர் மத்திய கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். 11 பேர் தனி பொருப்புடன் கூடிய மந்திரிகளாகவும், 10 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் பொறுப்பு ஏற்றாப்ரகள். மோடி மந்திரி சபையில் மொத்தம் 46 பேர் இடம் பெற்றனர். அத்வானி மந்திரி சபையில் இடம் பெற மருத்துவிட்டார். பா.ஜ மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் உள்துறை மந்திரியானார். அருண் ஜெட்லிக்கு நிதி மற்றும் பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டது. சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை  பொருப்பை ஏற்றார். கூட்டணி கட்சியைச் சேர்ந்சவர்களும் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டனர்.

சுவட்னாவைச் சேர்ந்த ஆனந்த் கீத்தே தனக்கு முக்கிய துவம் வாய்ந்த இலாகாவை ஒதுக்காததால் பதவி ஏற்க மறுத்தார். அவரை மோடி சமாதானம் செய்து மந்திரி பதவியை ஏற்க செய்தார். கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வேறு சிலரும் தங்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அருண் ஜெட்லி தன்னிடம் உள்ள பாதுகாப்புத் துறை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியிருந்தார். 

இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும். ஒரு சில இலாக்காக்கல் மாற்றப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. பிரதமர் மோடியும் இது குறித்து ஆலோசிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி கோபிநாத் முண்டே நேற்று முன்தினம் விபத்தில் மரணம் அடைந்தார். தற்போதைய சூழ்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு கேபினட் மந்திரிகள் நியமிக்கப்பட வெண்டியுள்ளது. கூட்டணி கட்சிகள் மற்றும் கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கும் மந்திரி பதவி அளிக்க வேண்டியுள்ளது. எனவே வருகிற 18-ந் தேதியிலிருந்து 20-ந் தேதிக்குள் மத்திய மந்திரி  சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.

பா.ஜ தலைவர் ராஜ்நாத் சிங் மத்திய மந்திரியாகி இருப்பதால் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே 12-ந் தேதிக்குப் பிறகு பா.ஜ நிர்வாகிகள் கூடி கட்சியின் புதிய தலைவர்களை தேர்ந்து எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு பிரதமர் மோடி கட்சி பிரமுகர்கள் மற்றும் கூட்டணி தலைவர்களிடம் ஆலோசனை செய்து புதிய மந்திரிகளை தேர்வு செய்வார். மந்திரி சபை விரிவாக்கத்தின் போது 20 பேர் வரை கூடுதலாக இடம் பெற வாய்ப்பு உள்ளது என்று பா.ஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்