முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு: இம்மாத இறுதியில் கேரளம் மனு தாக்கல்

புதன்கிழமை, 4 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூன் 5 - முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்ட அளவை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் அண்மையில் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் தெரிவித்தார். 

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பிறகு இம்மாதம் 30ம் தேதிக்குள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்ட அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்தத் னுமதித்து கடந்த மே 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும் அணையின் நீர் மட்ட அளவை உயர்த்தாமல் இருக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த 2006ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  அவசர சட்டம் செல்லாது என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேரள அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்