முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை

புதன்கிழமை, 4 ஜூன் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, ஜூன் 5 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஞாயிறன்று அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை 76,204 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை எண்ணப்பட்டது. இதில் ரூ. 2.20 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதே போல் கடந்த திங்கட்கிழமையன்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் பக்தர்கள் ரூ. 3 கோடியே 2  லட்சத்தை செலுத்தியிருந்தனர். இதில் ஒரு பக்தர் மட்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக ரூ. 1.20 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தார். இதற்கிடையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் சிறிதளவு குறைந்துள்ளது. இலவச தரிசனத்துக்காக 20 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 18 மணி நேரத்திலும், மலைப்பாதை பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். கூட்டம் குறைவாக இருந்ததால் ரூ. 300 டிக்கெட் மாலை வரை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago