முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ச்சி திட்டங்கள்: முதல்வர் சந்திரசேகரராவ் ஆலோசனை

புதன்கிழமை, 4 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, ஜூன் 5 - ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா கடந்த 2ம் தேதி முதல் தனி மாநிலமாக செயல்பட தொடங்கியது. முதல்வராக டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

முதல்வராக பொறுப்பேற்ற சந்திரசேகரராவ், தெலுங்கானா வளர்ச்சி குறித்தும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். முதல்கட்டமாக பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தார். 

அதன்படி ஐதராபாத், ரங்காரெட்டி, மெடக் மாவட்டங்களில் வருவாய் துறையில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு வருவாய் துறை செயலாளர் ஆர்.பி. மீனாவிற்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி வருவாய் துறை செயலாளர் நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ. தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய் துறையில் பணிபுரியும் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ் தன்னுடைய அமைச்சரவையில் தனது கட்சியினர் மற்றும் பிரபலங்களை ஆலோசகராக நியமித்துள்ளார். ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் அவர் ஆலோசனை நடத்தினார். அதில் ஐதராபாத் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஐதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு 2 படுக்கை அறையுடன் கூடிய வீடுகள் கட்டுதல், ஐதராபாத் நகரின் வளர்ச்சியை மையப்படுத்தி தொலைநோக்கு திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை முதல்வர் முகமது மமூத் அலி, அமைச்சர்கள் நாயனி நரசிம்மரெட்டி, பத்மாராவ், தலைமை செயலாளர் ராஜீவ் சர்மா, நகராட்சி துறை செயலாளர் ஜோஷி, ஐதராபாத் மாநகராட்சி ஆணையர் சோமேஸ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்