முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுநீர் கழித்ததற்காக சிறுவனின் பிறப்புறுப்பை வெட்டிய கொடூரம்

புதன்கிழமை, 4 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

பிரதாப்கார், ஜூன் 5 - உத்தரப் பிரதேச மாநிலத்தில் வயலில் சிறுநீர் கழித்ததற்காக 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரதாப்காரில் உள்ள கோராலி என்ற கிராமத்தில் இந்த பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கற்சூளையில் வேலைபார்க்கும் கூலித் தொழிலாளி ஷேஷ்ராம். இவரது 5 வயது மகன் ரிதேஷ். 

சம்பவ தினத்தன்று ரிதேஷ் வயலில் சிறுநீர் கழித்ததாகவும், அதை நேரில் பார்த்த வயலுக்குச் சொந்தக்காரர் சிறுவன் ரிதேஷைப் பிடித்து அடித்ததோடு அவனது பிறப்புறுப்பையும் வெட்டியுள்ளார். ரத்தம் பீறிட அலறியபடியே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த ரிதேஷ் நடந்ததைக் கூறியுள்ளார். உடனே அலகாபாத் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சிறுவனின் தந்தை துர்கேஷ் மௌரியா என்பவர் மீது போலீசில் புகார் அளித்தார். மௌரியாவின் மகனும் சேர்ந்து இந்தக் கொடுமையை சிறுவனுக்குச் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பை அறுத்த மௌரியாவும் அவரது மகனும் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறுமிகள் இருவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் அகிலேஷ் அரசு ஆட்டம் கண்டு வரும் நிலையில் இந்தச் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற மாநிலங்களில் பெரிய பெரிய குற்றங்கள் நடக்கும்போது அதனை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்றும் உ.பி.யில் சிறு குற்றங்கள் கூட ஊடகங்களால் பெரிது படுத்தப்படுகிறது என்று ஏற்கனவே முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago