முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி பெற்ற தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

புதன்கிழமை, 4 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, ஜூன் 5 - தெலுங்குதேசம் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது. 

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்த பின்னர் 13 மாவட்டங்களுடன் கூடிய சீமாந்திரா பகுதி புதிய ஆந்திர மாநிலமாக உருவானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சீமாந்திராவில் தெலுங்குதேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. வரும் 8ம் தேதி குண்டூரில் உள்ள நாகார்ஜூனா பல்கலைக்கழகம் எதிரே உள்ள மைதானத்தில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார். 

இந்த நிலையில் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்ரீநிவாஸா அரங்கில் நேற்று எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற தலைவராக சந்திரபாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக கடந்த 2 நாட்களாக அனைத்து பணிகளும் திருப்பதி எம்.எல்.ஏ வெங்கடரமணா தலைமையில் நடைபெற்று வருகிறது. இது குறித்து அக்கட்சி எம்.எல்.ஏ. கோபால் கிருஷ்ணா ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், 

திருப்பதி நகரம் முதல் முறையாக முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடுவை தேர்ந்தெடுக்க தயாராகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.சிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் சந்திரபாபு நாயுடு பின்னர் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்கிறார். அதை தொடர்ந்து அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்