முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கில் அரசு தலையிடாது

வியாழக்கிழமை, 5 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 6 - இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான கொலை வழக்கில் தலையிட முடியாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். 

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் 2 பேர் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற என்ரிகா லெக்சி என்ற இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலானோ லத்தோர், சல்வதோர் ஜிரோன் ஆகிய இருவரை கேரள போலீஸ் கைது செய்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தங்கள் மீதான  வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்று இத்தாலி வீரர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கை இத்தாலிக்கு மாற்ற வேண்டும் அல்லது நடுநிலையான வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று இத்தாலி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்தது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ. தலைவர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று கொண்டுள்ளார். அவரது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுஷ்மா ஸ்வராஜூக்கு இத்தாலி வெளியுறவு அமைச்சர் பெட்ரிகா மொஹரினி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து சுமார் 20 நிமிடம் இரண்டு தலைவர்களும் பேசி கொண்டனர். 

இத்தாலி வீரர்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த மொஹரினி இந்த வழக்கில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இந்த நிலையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக அவரிடம் தெரிவித்து விட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்