முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டண பாக்கிக்காக நவாஸ் விமானத்தை சிறைபிடித்த ஈரான்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஜூன் 6 - ஈரான் விமான நிலையத்துக்கு கட்டண பாக்கி செலுத்தாத விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸின் விமானத்தை ஈரான் அதிகாரிகள் சிறை பிடித்தனர். கடந்த மாதம் நடந்த இச்சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த மாதம் 12ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றிருந்தார். அப்போது அவரது விமானத்துக்கு ஈரான் விமான நிலைய அதிகாரிகள் எரிபொருள் நிரப்ப மறுத்து விட்டனர். அத்துடன் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ள ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை உடனடியாக செலுத்தாவிடில் விமானத்தை விடுவிக்க மாட்டோம் என்று ஈரான் விமான நிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். 

இதையடுத்து அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் பணம் செலுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 18ம் தேதி டெஹ்ரானில் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. அப்போது விமானத்துக்கு எரிபொருள் நிரப்பியதற்கான தொகை, விமான நிலைய பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றில் பாகிஸ்தான் ரூ. 2 லட்சம் அளவுக்கு பாக்கி வைத்திருந்தது. பலமுறை கேட்டும் பாக்கியை தராமல் பாகிஸ்தான் விமானம் நிறுவனம் இழுத்தடித்து வந்துள்ளது. இதனால் பிரதமர் வந்த நேரம பார்த்து ஈரான் அதிகாரிகள் பாக்கி தொகையை வசூலித்து விட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்