முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தலைமையில் ஆவின் உயர் அதிகாரிகள் கூட்டம்

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 7 –  பால் வளத் துறை அமைச்சர்  ஏ. மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களில் ஆவின் செயல்பாடுகள் குறித்து  பால்வளத்துறை அமைச்சர்  வி. மூர்த்தி  தலைமையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் டாக்டர் எஸ். விஜயகுமார் ஆவின் நிர்வாக இயக்குநர்/பால்வளத்துறை ஆணையர்  சுனீல் பாலீவால்,ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் 2-வது வெண்மைப்புரட்சியை ஏற்படுத்திட பல்வேறு பால்வளத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.  இத்திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.  இத்திட்டத்தின் பயனாக கடந்த 3 ஆண்டுகளில் பால்கொள்முதல் நாளொன்றுக்கு 20.12 இலட்சம் லிட்டரிலிருந்து 24 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.  அதேசமயம் பால் விற்பனை நாளொன்றுக்கு 20.67 என்ற அளவிலிருந்து 21.70 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.  கூட்டுறவு பால்பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை  பால்வளத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்கள்.  

மேலும், பால்பொருட்களின் விற்பனை சுமார் 100 கோடியிலிருந்து 150 கோடியாக அதிகரித்துள்ளது.  இதனைக் குறிப்பிட்ட  பால்வளத்துறை அமைச்சர் , முதலமைச்சரின்  விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின் பயனாளிகளை கூட்டுறவு அமைப்பின் கீழ் கொண்டுவந்து பால் கொள்முதலை மேலும் அதிகரிக்கவும், பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவித்துள்ள திட்டங்களைக் குறித்த காலங்களில் நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நுகர்வோர் தங்களது ஆலோசனை மற்றும் புகார் பற்றி தெரிவிக்க ஆவின் 24 மணிநேர நுகர்வோர் `நலம் மற்றும் சேவைப்பிரிவு’ 1800 425 3300 (இலவச சேவை) என்கிற தொலைபேசியிலோ அல்லது யயஎinஉடிஅயீடயiவேள@பஅயடை.உடிஅ என்கிற இணையதள முகவரியிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்த கூட்டத்திற்கு ஆவின் இணை நிர்வாக இயக்குநர் திருமதி ஆர்.கஜலெட்சுமி, ., பொது மேலாளர்கள் (விற்பனை)  எஸ்.கே.கதிர்வேலு, திரு எஸ். இளங்கோ, பொதுமேலாளர் (திட்டம்)  சி.லோகிதாஸ் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்