முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி தொடர்பகம்: சன் டி.வி. அதிகாரி ஆஜர்

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 8 - சன் டி.வி. நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, கலைஞர் டி.வி. நிர்வாக மேலாளர் சரத் குமார் ஆகியோர் சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்பு அலுவலகத்தில் நேற்று   நடைபெற்ற விசாரணையில் ஆஜ ரா கி, விளக்கம் அளித்தனர்.

முறைகேடான வகையில் சென்னையில் தொலைபேசி தொடர்பகம் வைத்திருந்ததாக சன் டி.வி. குழுமம் மீது சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக சன் டி.வி. நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரி, கலைஞர் டி.வி. நிர்வாக மேலாளர் ஆகியோர் சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்பு அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் நேற்று     ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு மே மாதம் வரை, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்ச ராக இருந்தார். அப்போது, சென்னை போட்கிளப்பில் உள்ள அவரது வீட்டுக்கு, சட்டவிரோதமாக 323 ஐ.எஸ்.டி.என்.தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டதாகவும், அவை தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி.யின் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்பட்டதாகவும் கடந்த 2007-ம் ஆண்டிலேயே இதுதொடர்பாக சி.பி.ஐ.க்கு புகார் வந்தது.   

தயாநிதி மாறன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 323 தொலைபேசி இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளரின் பெயரில் வாங்கப்பட்டிருந்தது. இந்த இணைப்புகள், வீடியோ கான்பரன்சிங், அதிக சக்திவாய்ந்த டிஜிட்டல் ஒளிபரப்பு போன்றவற்றுக்காக பெரிய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடியவை ஆகும். இவற்றுக்கான கட்டணமும் அதிகம். ஆனால், ஏறத்தாழ இலவசமாகவே சன் டி.வி.க்காக இந்த இணைப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.   

இதற்காக, தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்துக்கு பூமிக்கு அடியில் கேபிள் பதிக்கப்பட்டு, இந்த இணைப்புகள் சன் டி.வி.க்காக பயன்படுத்தப்பட்டு உள்ளன. பி.எஸ்.என்.எல்.லில் குறிப்பிட்ட நபரைத் தவிர, வேறு யாரும் கண்டுபிடிக்க முடியாதவகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், தயாநிதி மாறன் வீடு, ஒரு தொலைபேசி இணைப்பகம் போலவே செயல்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய தொலைத்தொடர்பு துறை செயலாளருக்கு சி.பி.ஐ. சிபாரிசு செய்தது. ஆனால், நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக, கடந்த 2011-ம் ஆண்டு பூர்வாங்க விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், சில பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், சன் டி.வி. நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, கலைஞர் டி.வி. நிர்வாக மேலாளர் சரத் குமார் ஆகியோர் சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்பு அலுவலகத்தில்  நடைபெற்ற விசாரணையில் ஆஜ ரா கி, விளக்கம் அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்