முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் முதல் அணு உலை முழு உற்பத்தி திறனை எட்டியது

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.8 - கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை முழு உற்பத்தித் திறனை எட்டியது. அணுஉலை 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில்,

கூடங்குளம் அணுஉலையில் மூன்று இலக்கங்களில் இருந்த மின் உற்பதித் திறன் 4 இலக்கத்தை எட்டிய நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்துனை ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம், என்றார். 

மேலும் அவர் கூறுகையில், கடந்த 5-ம் தேதி கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தித் திறன் 90 சதவீதத்தை எட்டிய போது, ஒரு வார காலத்திற்குள் முழு உற்பதித் திறனை எட்டும் என எதிர்பார்த்தோம். அணுஉலை உற்பத்தித் திறன் 900 மெகாவாட் எட்டிய போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் உற்பத்தி குறித்த அறிக்கையை அளித்து அடுத்த கட்டத்திற்கான அனுமதியை பெற சற்று கால அவகாசம் தேவைப்பட்டது என்றார். 

ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன், 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அணுஉலையை , இந்திய அணுசக்தி முகமை பொறியாளர்கள் இயக்கி வந்தனர். 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, 500 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டுமுன் பல்வேறு கட்டங்களாக அணுஉலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. 

முதல்கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆகஸ்ட் 14-ம் தேதி அனுமதி அளித்திருந்தது. அதை தொடர்ந்து அணுமின் நிலை யத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

ஜனவரி 26-ம் தேதி கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் அணுவிஜய் நகரில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பேசிய அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியிருப்பதாக தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து 750 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டுமுன் அணுஉலை மற்றும் டர்பைன் ஆகியவை நிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மார்ச் மாதத்தில் 750 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி எட்டப்பட்டிருந்தது. பின்னர் அணுஉலை மற்றும் டர்பைன் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்திடம் அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago