முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மோடியுடன் இன்று பேச்சு

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பீஜிங்.ஜூன்.8 -  சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தலைமையிலான குழு நேற்று புதுடெல்லி வந்தது. அவர்கள் இன்று பிரதமர் மோடி, மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்து கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜ 282 இடங்களை பிடித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 26-ஆம் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஏரைாளமான வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தலைமையிலான 7 பிரதிநிதிகள் கொண்ட குழு நேற்று புது டெல்லி வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை வாங் யீ தலைமையிலான குழு இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. சீனாவை தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் நேற்று புதுடெல்லி வந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கடந்த 10 நாட்களில் மட்டும் ஏராளமான வெளிநாட்டு தலைவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். பிரிக்ஸ், ஏசியன், சார்க், ஜி-20, போன்ற பலவகை கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கின்றனர். இந்த தகவலை இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்