முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு சிங்கப்பூரில் வேலை

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூன் 8 - இலங்கையில் அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் 40 பேர் சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிய போவதாக மறுவாழ்வு திட்ட ஆணையர் ஜகத்விஜேதில்லகே கூறினார். இங்கு தொழிற் பயிற்சி முடித்த 40 பேருக்கு பணி வழங்க தயாராக இருப்பதாக சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து கொழும்பில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் 2000ம் ஆண்டில் முடிவுக்கு வந்த பிறகு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த 12 ஆயிரம் விடுதலை புலிகள் மறுவாழ்வு மையங்களில் உள்ளனர். அவர்களில் 132 பேருக்கு தற்போது தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இயந்திரவியல், தகவல் தொழில் நுட்பம், மேலாண்மை, கால்நடைகள் பராமரிப்பு துறை, உணவு பதப்படுத்துதல், தச்சுவேலை, கைவினை தொழில், கட்டுமான தொழில் ஆகிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மறுவாழ்வு மையங்களில் உள்ளவர்கள் 230 பேர் உயர்கல்வி பயில்வதற்கு தகுதி பெற்றவர்களாக உள்ளனர். அவர்களில் 35பேர் பல்கலைக் கழகங்களில் படித்து வருகிறார்கள். இலங்கை அரசு சர்வதேச தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் சமூக பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் தற்போது சமுதாயத்துடன் இணைந்து வாழ்கிறார்கள். இந்த பயிற்சியை முடித்த முன்னாள் விடுதலை புலிகள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டியில் ரூ. 2.5லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடனுதவியை இதுவரை 1773 பேர் பெற்றுள்ளனர். பலர் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இங்கு பயிற்சி முடிப்பவர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறவும் மறுவாழ்வு முகாம் உதவி செய்கிறது. இங்கு பயிற்சி முடித்தவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறவும் மறுவாழ்வு முகாம் உதவி செய்கிறது. இங்கு பயிற்சி முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மறுவாழ்வு முகாம்களில் கல்வி, உளவியல், ஆலோசனை, ஆன்மீகம் ஆகியவற்றில் முன்னாள் விடுதலை புலிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்று மறுவாழ்வு திட்ட ஆணையர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்