முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலாய்லாமாவுடன் பேச்சு: சீனாவுக்கு அமெரிக்கா கண்டிப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜன 10 - திபெத் விவகாரம் தொடர்பாக தலாய்லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்த வேண்டும் என்று சீனாவுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் மேரி கார்ப் நிருபர்களிடம் கூறுகையில், 

சீனாவின் ஆதிக்கம் உள்ள திபெத் பகுதிகளில் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவலையுடன் பரிசீலித்து வருகிறது. திபெத் விவகாரம் குறித்து அதன் தலைவர் தலாய்லாமாவுடன் சீனா உறுதியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. 

திபெத் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு தொடர்ந்து ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது தொடர்பாக சீனா எந்தவித முன் அனுமதியும் இன்றி தலாய்லாமாவுடன் பேச்சு நடத்த முன்வர வேண்டும். திபெத்தின் லாசாவில் தனது தூதரகத்தை தொடங்குவதற்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அங்கு தூதரக அதிகாரிகள் சென்று வருவதற்கும் திபெத் பழங்குடியின மக்களை சந்திப்பதற்கும் சீனா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்