முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு: அதிபர் உத்தரவு

புதன்கிழமை, 11 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

டமாஸ்க்ஸ், ஜூன்.11 - சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில் சமீபத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட பஷர் - அல்-ஆசாத் அமோக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் 3-வது முறையாக அந்நாட்டின் அதிபராகி உள்ளார். மேலும் 7 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். 

தேர்தல் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் டமாஸ்கிசிஸ் நகரில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கிடையே அதிபர் ஆசாத் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஜூன் 9ம் தேதிக்கு முந்தைய அனைத்து வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என அறிவித்தார். 

புரட்சியின் போது கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.

மேலும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. அதுபோன்று ஆயுள் தண்டனை 20 ஆண்டுகளாகவும் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொடூர குற்றம் இழைத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago