முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடியின் ஆண்டு சம்பளம் ரூ.19.2 லட்சம்!

புதன்கிழமை, 11 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 11 - உலக அளவில் உள்ள பிரதமர்களில் குறைந்த சம்பளம் வாங்கும் பிரதமராக நரேந்திரமோடி உள்ளார். அவரது மாத சம்பளம் ரூ.1.60 லட்சம் ஆகும். அதே சமயம் உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரதமராக ரஷ்யஅதிபர் டிமிட்ரி மெத்வதேவ் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். மோடிக்கு இந்த பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. 

நம் பிரதமர் மோடியின் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம், தினசரி படி என்கிற வகையில் மாதம் ரூ.62 ஆயிரம், எம்.பி. நிதி என்ற வகையில் ரூ.45 ஆயிரம் மேலும், இதர செலவுகள் என்ற வகையில் ரூ.3 ஆயிரம் என ஆகமொத்தம் ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாத சம்பளமாக கிடைக்கிறது

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஆண்டுக்கு 2.33 கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் ரூ.2.33 கோடி சம்பளம் வாங்குகிறார். பெல்லியம் பிரதமர் ரூ.1.85 கோடி சம்பளத்துடன் 4வது இடத்தில் இருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 1.66 கோடி ரூபாய் சம்பளத்துடன் இந்த பட்டியலில் 5வதாக இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ரூ.1.41 கோடி சம்பளத்துடன் 7 வது இடத்திலும் சீன அதிபர் ரூ.23.47 லட்சத்துடன் 11 வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய பிரதமர் மோடியின் ஆண்டு வருமானம் ரூ.19.20 லட்சம் ஆகும். இவருக்கு பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ரூ.18 லட்சம் வருமானத்துடன் பட்டியலில் 13வது இடம் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் ரூ.1.79 லட்சம் பெற்று 15 வது இடத்தை பெற்றுள்ளார் பிரான்ஸ் அதிபர். அவருக்கு மாதம் ரூ.14,910 தான் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. நாளொன்று அவரது வருமானம் ரூ.715தான் என்கிறது அந்தப் பட்டியல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்