முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கின் மொசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்

வியாழக்கிழமை, 12 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத்,ஜூன்.13 - ஈராக்கின் இரண்டாவது பெரிய மொசுல் நகரத்தை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதைய டுத்து அச்சம் காரணமாக சுமார் 5 லட்சம் பேர் அந்த நகரத்தைவிட்டு வெளியேறி உள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட் (ஐஎஸ்ஐஎல்) என்ற தீவிரவாத அமைப்பு கார் வெடிகுண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டுள்ளனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பலுஜா நகரத்தைக் கைப்பற்றிய இந்த அமைப்பினர், மொசுல் நகரையும் கைப்பற்றினர். இதே அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸ்ஸாதுக்கு எதிராகவும் போரிட்டு வருகின்றனர்.

இது குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ள அமெரிக்கா, ஈராக்கில் மிகவும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த பிராந்தியத்துக்கே மிகப் பெரும் அச்சுறுத்தல் ஆகும் என கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மொசுல் நகரில் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமாகி இருப்பது கவலை அளிக்கிறது என்றார்.

இதுகுறித்து, ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச குடிபெயர்வு நிறுவனம் (ஐஓஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈராக்கின் மொசுல் நகரை  ஐஎஸ் ஐஎல் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் சுமார் 5 லட்சம் பேர் வெளியேறி வேறு இடத்தில் தங்கி உள்ளனர்.

கடந்த சில தினங்களாக நடை பெற்ற வன்முறை சம்பவங்க ளில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஏராளமானோர் காயமடைந்திருக் கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 4 மருத்துவமனைகளை உள்ளடக் கிய முக்கிய சுகாதார வளாகம் நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் அதனுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் அங்கிருந்து நடந்து வெளி யேறி வருகின்றனர்.

நகரின் மேற்குப் பகுதியில் இருந்த குடிநீர் வழங்கும் நிலையம் வெடிவைத்து தகர்க்கப்பட்டதால் குடிநீர் மற்றும் உணவுப் பொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஈராக் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபு பக் அல்-பாக்தாதி தலைமையிலான ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்பில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இதர ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் உள்ளனர். இவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். அல்காய்தாவின் ஒரு பிரிவாக செயல்பட்ட இந்த அமைப்பு இப்போது, அல்-காய் தாவையே மிஞ்சும் அளவுக்கு வளர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்