முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.ஜி.ஓக்களின் மீது மத்தியரசின் பிடி இறுகுகிறது

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 14 - இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று இந்தியாவின் மேம்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ள உளவுத் துறை என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடு, இந்திய பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று கூறியுள்ளது. எந்தெந்த என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பணம் பெற்றுள்ளன. அவை மத்திய அரசின் எந்தெந்த திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன என்ற முழு தகவலையும் உளவுத் துறை அறிக்கையாக தொகுத்து கொடுத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள என்ஜிஓக்கள்தான் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிலர் இதை சாமர்த்தியமாக ஒரு தொழில் போல் நடத்துவதும் தெரியவந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் உதயகுமாரின் என்ஜிஓ அமைப்பு வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரம் டாலர் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் உளவு துறை குற்றச்சாட்டுகளை என்ஜிஓ அமைப்புகள் மறுத்துள்ளன என்றாலும் உளவு துறை எச்சரிக்கையை சாதாரணமாக விட்டு விட கூடாது என்பதில் பிரதமர் அலுவலகம் உறுதியாக உள்ளது. எல்லா அமைச்சகங்களுக்கும் பிரதமர் அலுவலகம் 2 தடவை கடிதம் எழுதியுள்ளது. அதில் உங்கள் துறையுடன் இணைந்து செயல்படும் என்ஜிஓக்கள் எத்தனை உள்ளன. அவை என்னென்ன திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன என்ற தகவலை சேகரித்து தருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. என்ஜிஓக்களின் செயல்பாடுகள் பற்றி பிரதமர் அலுவலகம் தகவல்கள் கேட்டுள்ளதால் என்ஜிஓக்கள் மீதான மத்திய அரசின் பிடி இறுகியுள்ளது. இது என்ஜிஓக்களை கலக்கம் அடைய செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கொடுக்கும் தகவல்களின் பேரில் என்ஜிஓக்கள் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!