முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைநகர் பாக்தாத்தை கைப்பற்ற தீவிரவாதிகள் முயற்சி

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன் 14  - ஈராக்கில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாத்தை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த சதாம் உசேன்  வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா ஆதரவுடன் மைனாரிட்டியாக வாழும் ஷியா பிரிவினர் ஆட்சி நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது. 

 சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எல். என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசுக்கு எதிராகப் போரிட்டு வருகிறார்கள்.   பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இதனால் அங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஈராக்கின் 2-வது பெரிய தலைநகரமான மொசூல் உள்ளிட்ட பல பகுதிகளைக் கைப்பற் றினர். வடக்கு பிராந்தியத்தை சேர்ந்த நினிவே மற்றும் கிர்குக் பகுதிகளையும், துலிலியாவையும்  பிடித்தனர்.

சதாம் உசேனின் சொந்த  ஊரான தித்ரித் நகரையும் பிடித்த அவர்கள் அவரது அரண்மனையையும் தங்கள் வசமாக்கினர்.  இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் மீது ராணுவ விமானங்கள்  4 முறை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.      அப்படியிருந்தும் அவர்களை வெளியேற்ற  முடியவில்லை. திக்ரித் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதற்கிடையே அவர்கள் தலநகரான பாக்தாத்தையும் கைப்பற்றுவதற்காக நெருங்கி வருவதாக  செய்திகள் தெரிவி்க்கின்றன.

தீவிரவாதிகளின் படைகள் இப்போது பாக்தாத்திலிருந்து  90 கி.மீ. தூரத்தில்தான் தான் உள்ளன. அதைத் தொடர்ந்து பிரதமர் நாரி அல்-மாலிகி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமெரிக்க ராணுவத்தின் உதவியைக் கோர முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு அமெரிக்கா தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படாமல் மவுனம் காக்கப்பட்டது. ஏனெனில் ஏற்கெனவே நடந்த ஈராக் போரில் 4500 வீரர்கள் பலியாகினர். எனவே அங்கு மீண்டும் படைகளை அனுப்ப வேண்டுமா என்று அமெரிக்கா யோசித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈராக் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எங்களது தேசிய பாதுகாப்புக்குழு ஈராக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னி்ப்பாக கவனித்து வருகிறது என்று தெரிவி்த்துள்ளார்.

                                    

  

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்