முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனில் இந்தியத் தொழிலதிபருக்கு சாதனையாளர் விருது

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன்.16 - பிரிட்டனில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஸ்வராஜ் பாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கல்வி, தொழில், சேவை, ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பு செலுத்தியதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த வர்த்தக சங்கம் அவருக்கு இந்த வருதை வழங்கியுள்ளது. வெஸ்ட் மிட்லெண்ட்ஸ் பகுதியில் உள்ள வெட்னஸ் பரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்வராஜுக்குப் பதிலாக அவரது மகள் அஞ்சலி, விருதைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஸ்வராஜ் சார்பாக அஞ்சலி பேசியதாவது:

வெஸ்ட் மிட்லெண்ட்ஸ் பகுதியில் முதலில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், தற்போது, 23 கிளைகளுடன் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. மேலும், வால்வர் ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தலைவராக 1999-ஆம் ஆண்டுமுதல் பதவி வகித்து வருகிறேன். அந்தப் பல்கலைக்கழகத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 22,000 பேர் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், புதிய முயற்ச்சியாக கல்வியையும், தொழிலையும் இணைக்க விரும்பினேன். அதற்காக வால்வர் ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அறிவியல் பூங்கா ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம் என்று அஞ்சலி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!