முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செபிக்கு அதிகாரம்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.18 - இந்தியப் பங்கு பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (செபி) கூடுதல் அதிகாரம் வழங்கி இயற்றப்பட்ட அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் பிரசாந்த் பாலசுப்ரமணியம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: இந்தியப் பங்கு பரிவர்த்தனைக் கட்டுபாட்டு வாரியச் சட்டத்தில் (செபி) கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி அவசர திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன் மூலம் செபியின் அதிகார வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் செபிக்கு வழங்கப்பட்டுள்ளது. செபி சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்கெனவே அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு திருத்தப்பட்டது. அதன் பிறகு செப்டம்பர் மாதம் மீண்டும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அவசரச் சட்டம் இரண்டு முறைதான் கொண்டு வரமுடியும்.

ஆனால், செபிக்கு மூன்றாவது முறையாக அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப்படி, எந்தத் துறையாக இருந்தாலும் செபி அந்தத் துறைக்குள் செல்ல முடியும். அது எங்கு இருந்தாலும், அங்குள்ளவற்றை பறிமுதல் செய்ய செபியால் தற்போது முடியும்.

இந்தச் சட்டம் பரிசீலனை செய்யாமல் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது.

எனவே, அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை (ஜூன் 16) விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்

உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்