முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிழல் உலக தாதா மூலம் மிரட்டல்: வாடியா குழுமம் புகார்

புதன்கிழமை, 18 ஜூன் 2014      சினிமா
Image Unavailable

 

மும்பை,ஜூன்.19 - ப்ரீத்தி ஜிந்தா - நெஸ் வாடியா விவகாரம் தீவிரமாகி வரும் நிலையில், நிழல் உலக தாதா மூலம் மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தாக, மும்பை போலீஸிடம் வாடியா குழுமம் புகார் அளித்துள்ளது. 

இது குறித்து மும்பை போலீஸார் கூறும்போது, "வாடியா குழுமத்தில் இருந்து புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. நெஸ் வாடியாவின் தந்தை தொழிலதிபர் நுல்சி வாடியாவின் தனிச் செயலரின் செல்பேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதன் தொடர்ச்சியாக, ப்ரீத்தி ஜிந்தா - நெஸ் வாடியா விவகாரத்தில் மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

இந்தத் தொலைபேசி அழைப்பு திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் வந்ததாகவும், நிழல் உலக தாதா ரவி புஜாரி என்பவரிடமிருந்து நெஸ் வாடியாவுக்கும், அவரது தந்தைக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர். 

வாடியா குழுமத்தால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, மும்பை குற்றப் பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

நெஸ் வாடியா, ப்ரீத்தி ஜிந்தா இருவருமே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக இருப்பவர்கள். குஜராத்தை சேர்ந்த நெஸ் வாடியா பிரபல தொழிலதிபர். இருவரும் முன்பு காதலர்களாக இருந்தவர்கள். 

மே மாதம் 30-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடந்த போது, தன்னிடம் நெஸ் வாடியா பாலியல்ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், மோசமான வார்த்தைகளில் பேசியதாகவும் ப்ரீத்தி ஜிந்தா புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!